“மரம் வளர்ப்போம் அறம் காப்போம், உயிர் காடுகளை வளர்த்து உயிரினங்களை மீட்டெடுப்போம்.”

– மு ஆ செல்வம் B.Tech.,
தகவல் தொழில்நுட்பம் 

வரவிருக்கும் நிகழ்வுகள்

1000 மரக்கன்றுகள் நடும் விழா 2022

மொன்னானி கல்வி மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை சார்பாக உணவுக்காடு அமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.

மரக்கன்றுகள் வழங்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.

தொடர்பு எண்:
+91 9787496454
+91 8489649698
+91 7094018241

நிகழ்வுகள்

12.02.2017 அன்று MEET - குழு தொடங்கப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.

கிராமப்புற கல்வி மற்றும் தமிழ் நாடு சுற்றுச்சூழல் மேன்மைக்காக “மொன்னானி கல்வி மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை” தொடங்கப்பட்டு கல்வி / சுற்றுச்சூழல் தன்னார்வலர்கள் உதவியுடன் மரம் நடும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

MEET கல்வி சுற்றுலா புதுக்கோட்டை மாவட்டம் - 2017

MEET – குழு சார்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் கோட்டை மற்றும் சித்தன்னவாசல் குடைவரை குகைக்கோயில் ஆகிய இடங்களில் கல்வி / சுற்றுச்சூழல் சுற்றுலா பயணம் செல்லப்பட்டன.

உலக்குடி மற்றும் வடகீழ்குடி பள்ளி மாணவ மாணவியர்களுக்கான திட்டம் 2017

கண்ணங்குடி ஒன்றிய வட்டார கல்வி அதிகாரி மதிப்பிற்குரிய திரு எ குமார் M.Sc., MA., B.Ed – அவர்கள் தலைமையில் உலக்குடி மற்றும் வடகீழ்குடி பள்ளி மாணவ மாணவியர்களுக்கான திட்டம் 2017 அன்று நடைபெற்றது. முன்னின்று நடத்தி கொடுத்த தலைமை ஆசிரியர்கள் மதிப்பிற்குரிய திரு. அன்பரசன் MA.,B.Ed., அவர்கள் மற்றும் திருமதி. ஆரோக்கியமேரி MA.,B.Ed அவர்களுக்கும் எங்கள் MEET-குழு சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மரம் நடும் திட்டம் 2021​

மொன்னானி – ஸ்ரீ பத்மாவதி சமேத ஸ்ரீ நிவாசப் பெருமாள் திருக்கோயிலில் கண்ணங்குடி யூனியன் வடகீழ்க்குடி நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மதிப்பிற்குரிய திரு அன்பரசன் MA., B.Ed., அவர்கள் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

வனப்பகுதியிலிருந்து உலகத்தை ஆராயுங்கள்...

உலகத்தின் பெருமைமிக்க நம் தமிழ் பெருமக்களின் வாழ்கை முறை இன்றைய உலகம் தோன்றும் முன்னின்றே மலைகள், காடுகள் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் செம்மையும் செழிப்புமிக்க மனித நாகரீக தோன்றலின் முன்னோடியாகவே இருந்துள்ளது.
இன்று தேவைக்கு அதிகமாக மலைகள் தோண்டப்பட்டும் காடுகள் அழிக்கப்பட்டும் வருகின்றன, ஆறுகள் ஆற்றங்கரை பகுதிகளே இல்லாமல் போய்விட்டன. மனித இனம் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் இந்த பூமியில் வாழவேண்டும் என்றல் MEET..

வரவிருக்கும் இலக்குகள் மற்றும் சுற்றுப்பயணங்கள்

  1. MEET – குழு சார்பாக கல்வி மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைக்கான பயணங்கள் தமிழ் நாடு முழுக்க உள்ள முக்கியமான கல்வி நிலையங்கள் மற்றும் மலைத்தொடர்ச்சி பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்ய திட்டம் செய்யப்பட்டுள்ளது.
  2. தமிழ் நாடு அரசு கல்வி நிலையங்களில் மாணவர்களையே தலைமை ஏற்க செய்து பல லட்சம் மரங்களை தமிழ் நாடு முழுக்க நடுதல்.
  3. கல்வி மற்றும் சுற்றுச்சுழல் தன்னார்வலர்கள் முன்னிலையில் அனைத்து பகுதிகளிலும் வனங்களை உருவாக்குதல்.

முகவரி

ஸ்ரீ பத்மாவதி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், மொன்னானி கிராமம்.

இணையதள பார்வையாளர்கள் எண்ணிக்கை

எங்கள் இணையத்தை பார்வையிட்டதற்கு MEET குழு சார்பாக நன்றி...!!

X